விராட் கோலி சாதனையை முறியடித்த பாகிஸ்தான் இளம் வீரர்!

விராட் கோலி சாதனையை முறியடித்த பாகிஸ்தான் இளம் வீரர்!
பாபர் அஷாம்
  • Share this:
இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் அசாம் தனது சதத்தின் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி கராச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் பாபர் அசாம் அதிகபட்சமாக 115 ரன்கள் விளாசினார்.

இதனையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்ததால் அந்த அணி தடுமாறியது. நடுவரிசை பேட்ஸ்மேன் சினேகன் ஜெயசூர்யா மட்டும் நிலைத்துநின்று ஆடி 96 ரன்கள் குவித்தார்.


இறுதியாக இலங்கை அணி 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பாபர் அசாம்  குறைந்த போட்டிகளில் 11 சதமடித்த வீரர்களில் கோலியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

பாபர் அஷாம் 71 இன்னிங்சில் 11 சதமடித்து 3வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாயாக விராட் கோலி 82 இன்னிங்ஸில் 11 சதமடித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவின் அம்லா 64 இன்னிங்சில் முதலிடத்திலும் மற்றொரு தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி-காக் 65 இன்னிங்ஸ் உடன் 2வது இடத்திலும் உள்ளார்.

Also Watch : 5 தங்கம் வென்ற என்னை அரசு கண்டுகொள்ளவில்லை: பளுதூக்கும் வீராங்கனை
First published: October 1, 2019, 12:38 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading