• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சதத்தில் சாதனை படைத்த பாபர் ஆசாம்: ஆம்லா, கோலியை முந்தினார்!

சதத்தில் சாதனை படைத்த பாபர் ஆசாம்: ஆம்லா, கோலியை முந்தினார்!

பாபர் ஆசாம்

பாபர் ஆசாம்

தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் ஆம்லா மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோரின் அதிவேக 13 சதங்கள் சாதனையை பாபர் ஆசாம் முறியடித்திருக்கிறார்.

  • Share this:
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார். அந்த வகையில் ஆம்லா, கோலி ஆகியோரை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது அதிரடியான ரன் வேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் நேற்று ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 13வது சதத்தை அடித்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் அந்த அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நேற்று (ஏப்ரல் 2) நடைபெற்றது. இதில் 104 பந்துகளில் 103 ரன்களை விளாசினார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம். அவரின் சதத்தின் உதவியுடன் முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது பாகிஸ்தான். இது ஒரு நாள் போட்டிகளில் பாபர் ஆசாமின் 13வது சதமாக அமைந்தது.

இதனிடையே பாபர் ஆசாம் அடித்த இந்த சதம் அவரை 13 சதங்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆக்கியுள்ளது. 78வது போட்டியில் விளையாடியிருக்கும் பாபர் ஆசாம் 76வது இன்னிங்ஸில் இச்சாதனையை செய்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் ஆம்லா மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோரின் அதிவேக 13 சதங்கள் சாதனையை பாபர் ஆசாம் முறியடித்திருக்கிறார். ஆனால் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா 83 இன்னிங்ஸிலும், விராட் கோலி 86வது இன்னிங்ஸிலும் இச்சாதனையை படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிவேக 13 சதம் கண்ட வீரர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் (86 இன்னிங்ஸ்) விராட் கோலியுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 91 இன்னிங்ஸுடன் 3வது இடத்தில் உள்ளார்.

கேப்டனாக பாபர் ஆசாம் எடுத்த 2வது சதம் இதுவாகும். முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 125 ரன்கள் எடுத்துள்ளார் இந்த 26 வயது இளம் வீரர்.

இதே போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரரான Rassie van der Dussen சதம் அடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக வயதில் (32 years and 54 days) களமிறங்கி சதம் எடுத்த அறிமுக வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் 76வது இன்னிங்ஸில் 13வது சதத்தை எடுத்து அதிவேக சதம் கண்ட வீராங்கனையாக திகழ்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: