ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘பாக். கேப்டன் பாபர் ஆசம் ஒரு ஜீரோ… அவரை கோலியுடன் ஒப்பிடாதீர்கள்’ – முன்னாள் வீரர் கடும் விமர்சனம்…

‘பாக். கேப்டன் பாபர் ஆசம் ஒரு ஜீரோ… அவரை கோலியுடன் ஒப்பிடாதீர்கள்’ – முன்னாள் வீரர் கடும் விமர்சனம்…

பாபர் ஆசம்

பாபர் ஆசம்

படுதோல்வியை சந்தித்து இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது, அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் ஒரு ஜீரோ என்றும், அவரை விராட் கோலியுடன் ஒப்பிடக் கூடாது என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

யூடியூப் சேனலில் அவர் பதிவிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் கனேரியா கூறியிருப்பதாவது-

முதலில் விராட் கோலியுடன் பாபர் ஆசத்தை ஒப்பிடுவதை ரசிகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகப்பெரும் வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதுபோன்ற  எவரும் பாகிஸ்தான் அணியில் இல்லை என்பதுதான் உண்மை.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமை பேசச் சொன்னால் ராஜாவை போன்று பேசுவார். ஆனால் அணியை வெற்றி பெறச் சொன்னால் அவருடைய திறமை ஜீரோவாக இருக்கும். பாபர் ஆசம் மிகப்பெரிய ஜீரோ. கேப்டனாக செயல்படும் தகுதி அவருக்கு கிடையாது.

பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் ஆகியோரிடம் இருந்து பாபர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 7 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இதில் 20 ஓவர் போட்டி தொடரை 4-3 என்ற கணக்கிலும், டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

‘வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார்’ – பிசிசிஐ அறிவிப்பு

குறிப்பாக டெஸ்ட் போட்டியில் மூன்று போட்டியிலுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்து இருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. படுதோல்வியை சந்தித்து இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது, அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

First published:

Tags: Cricket, Pakistan cricket