2021 ஐசிசி டி20 உலகக்கோப்பை சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது. இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி தழுவியதில் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது, விராட் கோலி கேப்டன்சியில் கடைசி டி20 தொடரில் இந்திய அணி வெறுங்கையுடன் திரும்பியுள்ளது.
2007-க்குப் பிறகு டி20 உலகக்கோப்பை இன்னும் நம் கைகளுக்கு வரவில்லை. வெஸ்ட் இண்டீஸ் இருமுறை வென்று விட்டது, நியூசிலாந்து இன்னும் ஒருமுறை கூட வெல்லவில்லை, நேற்று நல்ல வாய்ப்பு இருந்தது ஆனால் ஆஸ்திரேலியா அவர்களை விடவும் பிரமாதமாக ஆடிவிட்டனர்.
Job well done, Australia 👏#T20WorldCupFinal #T20WorldCup pic.twitter.com/MykPL2SH5g
— ICC (@ICC) November 15, 2021
இந்நிலையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 சிறந்த அணியை அறிவித்துள்ளது, அதில் ஆச்சரியகரமாக ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. பாபர் ஆசம் கேப்டனாக இருக்க வார்னர், பட்லர் தொடக்க வீரர்கள், ஆசம் 1 டவுன். இலங்கையின் அசலங்கா அடுத்ததாக இடம்பெற்றுள்ளார். மார்க்ரம், மொயின் அலி, இலங்கையின் ஹசரங்கா, ஆடம் ஜாம்ப்பா, ஹேசில்வுட், போல்ட், நார்ட்யே ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 12வது வீரராக பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்டீடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
The @upstox Most Valuable Team of the Tournament has been announced 🌟
Does your favourite player feature in the XI?
Read: https://t.co/J3iDmN976U pic.twitter.com/SlbuMw7blo
— ICC (@ICC) November 15, 2021
ஐசிசி சிறந்த டி20 அணி வருமாறு: பாபர் ஆசம், வார்னர், பட்லர், அசலங்கா, மார்க்ரம், மொயின் அலி, ஹசரங்கா, ஆடம் ஜாம்ப்பா, ஹேசில்வுட், போல்ட், நார்ட்யே
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Babar Azam, David Warner, ICC world cup, T20 World Cup