Home /News /sports /

ஐசிசி தரவரிசை: நம்பர் 1 அசைக்க முடியாத இடத்தில் பாபர் அசாம்; அட பவுலிங்கில் இவரா முதலிடம்?

ஐசிசி தரவரிசை: நம்பர் 1 அசைக்க முடியாத இடத்தில் பாபர் அசாம்; அட பவுலிங்கில் இவரா முதலிடம்?

பாபர் அசாம் நம்பர் 1 பேட்ஸ்மேன்.

பாபர் அசாம் நம்பர் 1 பேட்ஸ்மேன்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஏற்கெனவே முதலிடத்தில் உள்ள பாபர் அசாம், டி20 தரவரிசையிலும் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலானை பின்னுக்குத்தள்ளி அசைக்க முடியாத முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்.

    ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஏற்கெனவே முதலிடத்தில் உள்ள பாபர் அசாம், டி20 தரவரிசையிலும் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலானை பின்னுக்குத்தள்ளி அசைக்க முடியாத முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்.

    பவுலிங் ரேங்கிங்கில் டி20 தரவரிசையில் இலங்கையின் வைனிந்து ஹசரங்கா முதலிடம் வகிக்கிறார். வைனிந்து ஹசரங்கா முதலிடம் வகிப்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம் ஆனால் அவர் சில காலமாக பிரமாதமாக வீசிவருகிறார் என்பதைப் புள்ளி விவரங்கள் எளிதில் கூறி விடும்.

    834 புள்ளிகளுடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டேவிட் மலானை பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். மலான் 798 புள்ளிகளைப் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளார். பாபர் அசாம் டி20 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் 198 ரன்கள் எடுத்து பிரமாதமான பார்மில் இருக்கிறார். இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா ஆகிய அணிகளுக்கு எதிராக அரைசதம் எடுத்தார்.

    இந்த டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களைக் குவித்த 3வது வீரராக இதுவரை திகழ்ந்து வருகிறார் பாபர் அசாம். ஒருநாள் தரவரிசையில் பாபர் அசாம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார், கோலி, ரோகித் சர்மா முறையே 844, 813 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

    படு ஆச்சரியம் என்னவெனில் நீண்ட காலத்துக்குப் பிறகு இலங்கையிலிருந்து ஒரு பவுலர் டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கிறார், அவர் வைனிந்து ஹசரங்கா, மலிங்காவுக்க்குப் பிறகு என்று கூறலாம். தென் ஆப்பிரிக்கா லெக் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சியை ஹசரங்கா பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

    ஏப்ரல் மாதம் முதல் ஷம்சி இந்த முதலிடத்தை தக்கவைத்து வந்தார். ஆனால் 776 புள்ளிகளுடன் ஹசரங்கா முதலிடம் பிடித்தார். ஷம்சி 770 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் ஹசரங்கா 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதித்தார். பேட்டிங்கிலும் 119 ரன்களை 148 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார் ஹசரங்கா. ஆல்ரவுண்டர்களில் 4ம் இடத்தில் இருக்கிறார் ஹசரங்கா.

    ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, சாகிப் அல் ஹசனுடன் ஆல்ரவுண்டர்கள் தரநிலையில் டாப் இடத்தைப் பகிர்கிறார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Babar Azam, T20 World Cup

    அடுத்த செய்தி