முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆரம்ப கால கோலி போலவே சாதனை உடைக்கும் பாபர் அசாம்- ஹஷிம் ஆம்லா சாதனையை உடைத்தார்

ஆரம்ப கால கோலி போலவே சாதனை உடைக்கும் பாபர் அசாம்- ஹஷிம் ஆம்லா சாதனையை உடைத்தார்

பாபர் அசாம்

பாபர் அசாம்

விராட் கோலி எப்படி ஒருநாள் போட்டிகளில் தன் ஆரம்ப நாட்களில் சாதனைகளை தவிடுபொடியாக்கி கொடியை நாட்டினாரோ அதே போல் இப்போது பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் சாதனைகளை முறியடித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விராட் கோலி எப்படி ஒருநாள் போட்டிகளில் தன் ஆரம்ப நாட்களில் சாதனைகளை தவிடுபொடியாக்கி கொடியை நாட்டினாரோ அதே போல் இப்போது பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் சாதனைகளை முறியடித்து வருகிறார்.

நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பரபரப்பான முறையில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் ஒருநாள் போட்டியில்ல் பாபர் அசாம் 85 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து வான் பீக் என்பவர் பந்தை வாரிக்கொண்டு அடிக்கப்போய் மிட் ஆஃபில் கொடியேற்றி வெளியேறினார்.

இவரும் பகர் ஜமானும் சேர்ந்து 168 ரன்களைச் சேர்க்க பாகிஸ்தான் 314 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து 298 வரை வந்து போராடி தோற்றது.

இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள 88 இன்னிங்சில் பாபர் அசாம், 4481 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு 88 இன்னிங்சில் தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 4473 ரன்கள் அடித்ததே ஒருநாள் போட்டியில் சிறந்த சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

First published:

Tags: Babar Azam, Pakistan Cricketer