70 சதங்களை எடுத்து 23,000த்திற்கும் அதிகமான ரன்களை எடுத்து ஆடிவரும் விராட் கோலி எங்கு இருக்கிறார்.. 3வடிவங்களிலும் இப்போதுதான் 10,000 ரன்களை எடுத்துள்ள பாபர் அசாம் எங்கு இருக்கிறார்? ஆனால் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் போது பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் விராட் கோலியைத் தாண்டியிருப்பார் என்கிறார் இமாம் உல் ஹக்.
விராட் கோலி கடைசியாக சதம் எடுத்தது 2019-ல் வங்கதேசத்துக்கு எதிராக அதன் பிறகு தவியாய் தவித்து வருகிறார் கோலி, அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவில் இப்போதுதான் டெபூ என்பது போ 270 பந்துகளில் ஒரு 74 ரன்களை எடுத்தார் விராட் கோலி, தவியாகத் தவித்து வருகிறார், ரன்கள் இல்லாமல்.
மாறாக பாபர் அசாம், அவரின் சாதனைகளை கொஞ்சம் கொஞ்சமாக தூளாக்கி வருகிறார். அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக நீண்ட காலங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியை கடந்த 2021இல் முந்திய பாபர் அசாம் கடந்த மாதம் 1013 நாட்களாக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியை அதிலும் முந்தியுள்ளார்.
இந்நிலையில் இமாம் உல் ஹக் கூறும்போது, கோலி ஒரு ஜாம்பவான் ஆனாலும் என் நண்பரும் கேப்டனுமாகிய பாபர் அசாம் விராட் கோலியின் சாதனைகளைக் கடந்து அவரை விட 3000-4000 ரன்கள் கூடுதலாக தன் கரியர் முடிவில் எடுத்திருப்பார் என்று கூறியுள்ளார்.
விராட் கோலி ஒரு ஜாம்பவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் 240க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள ஒருவருடன் 80 போட்டிகளில் விளையாடிய ஒருவரை நீங்கள் ஒப்பிட முடியாது. தற்சமயத்தில் அந்த இருவரின் கரியரை ஒப்பிட்டு பார்த்தால் பாபர் அசாம் முன்னோக்கி உள்ளார்.
ஆனால், பாபர் அசாம் விராட் கோலியின் நிறைய சாதனைகளை உடைக்க விரும்புகிறேன். இருந்தாலும் அவர்களிடையே தற்போது நிலவும் ஒப்பீடுகள் எனக்கு புரியவில்லை. ஏனெனில் ஒருவர் 23000 ரன்கள் பக்கம் அடித்துள்ளார். அசாம் இப்போதுதான் 10,000த்தை கடந்துள்ளார். இருப்பினும் அந்த இருவர்களின் கரியர் முடியும்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலியை விட பாபர் அசாம் குறைந்தது 3 – 4 ஆயிரம் ரன்களை அதிகமாக அடித்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”
என்றார் இமாம் உல் ஹக்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Babar Azam, India vs Pakistan, Virat Kohli