விராட் கோலியின் சாதனையை தகர்த்த பாகிஸ்தான் இளம் வீரர்!

ICC World Cup 2019 | Virat Kohli | Babar Azam | ஒரு நாள் போட்டிகளில் தனது 10 வது சதத்தை பதிவு செய்த பாபர் அசாம் 29 ரன்களை கடந்த போது 3,000 ரன்களை எட்டினார்.

விராட் கோலியின் சாதனையை தகர்த்த பாகிஸ்தான் இளம் வீரர்!
பாபர் அஷாம்
  • News18
  • Last Updated: June 27, 2019, 3:36 PM IST
  • Share this:
உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் அசாம் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பாபர் அசாமின் பொறுப்பான ஆட்டமே பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஒரு நாள் போட்டிகளில் தனது 10 வது சதத்தை பதிவு செய்த பாபர் அசாம் 29 ரன்களைக் கடந்த போது 3,000 ரன்களை எட்டினார். பாபர் அசாம் 68-வது போட்டியில் 3,000 ரன்களை கடந்து கோலியின் சாதனையை தகர்த்துள்ளார்.
விராட் கோலி 75 போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து இருந்தார். இதற்கு முன்னே 1000 மற்றும் 2000 ரன்களை கடந்த கோலியின் சாதனையும் பாபர் அசாம் முறியடித்தள்ளார்.

தென்னாப்பிரக்கா அணியின் ஹாசிம் அம்லா 57 ஒரு நாள் போட்டிகளில் 3000 ரன்களை கடந்ததே சாதனயைாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பிடித்து உள்ளார்.

ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 3,000 ரன்களை கடந்த வீரர்கள்

57 - ஹாசிம் அம்லா, தென்னாப்பிரிக்கா
68 - பாபர் அசாம், பாகிஸ்தான்
75 - விராட் கோலி, இந்தியா

Also Watch

First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading