ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பேட்டிங் சராசரி 66.48 : இந்தியா-ஏ அணித் தேர்வில்கூட புறக்கணிக்கப்படும் தமிழக வீரர் பாபா இந்திரஜித்?

பேட்டிங் சராசரி 66.48 : இந்தியா-ஏ அணித் தேர்வில்கூட புறக்கணிக்கப்படும் தமிழக வீரர் பாபா இந்திரஜித்?

பாபா இந்திரஜித்

பாபா இந்திரஜித்

தமிழ்நாடு அணியைச் சேர்ந்த பாபா இந்திரஜித் மிகப்பிரமாதமாக ஆடி தற்போது கோவையில் நடைபெற்று வரும் தெற்கு மண்டல-மேற்கு மண்டல துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.இவர் தொடர்ந்து 2016 முதல் பேட்டிங் சராசரி 66.48 என்று வைத்திருந்தாலும் இந்தியா ஏ அணியில் இடம் பெறவில்லை

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அணியைச் சேர்ந்த பாபா இந்திரஜித் மிகப்பிரமாதமாக ஆடி தற்போது கோவையில் நடைபெற்று வரும் தெற்கு மண்டல-மேற்கு மண்டல துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் விளாசியுள்ளார். இவர் தொடர்ந்து 2016 முதல் பேட்டிங் சராசரி 66.48 என்று வைத்திருந்தாலும் இந்தியா ஏ அணியில் கூட தேர்வாகாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் வலுவான மேற்குமண்டல அணிக்கு எதிராக அவர் 125 பந்துகளில் 118 ரன்கள் விளாசி 94.40 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து தெற்கு மண்டல அணிக்கு முன்னிலை பெற உதவியுள்ளார்.  சாய் கிஷோரின் அற்புத பவுலிங்கில் 5 விக்கெட்டுகளைச் சாய்க்க ரஹானே கேப்டன்சியில் ஆடும் மேற்கு மண்டலம் தன் முதல் இன்னிங்சில் 270 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய ஹனுமா விஹாரி தலைமை தெற்கு மண்டலம் எந்த ஒரு வீரரும் அரைசதம் காணாத போதிலும் பாபா இந்திரஜித் 125 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் விளாசி அதிரடி சதம் கண்டு முன்னிலை பெற்றுக்கொடுத்துள்ளார்.  2021-22 ரஞ்சி சீசனில் 4 இன்னிங்ஸ்களில் 396 ரன்களைக் குவித்தார், இதில் 3 சதங்கள், ஒரு அரைசதம். ரெட் பால் கிரிக்கெட்டில் 99 ரன்கள் சராசரி என்று வைத்திருக்கும் போது அவரது ஸ்ட்ரைக் ரேட் ஆச்சரியமளிப்பதாகும். 76.74. 149 பந்துகளில் 117, 141 பந்துகளில் 127, 132 பந்துகளில் 100 ஆகியவை அவரது சதமெடுக்கும் வேகத்துக்கு உதாரணங்கள்.

Also Read : பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக ஆடுவதில்லை : கங்குலி கவலை

இந்நிலையில் இந்தியா ஏ அணி நியூசிலாந்து ஏ அணியுடன் 3 டெஸ்ட்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது, இதில் பாபா இந்திரஜித் புறக்கணிக்கப்பட்டார். இது தொடர்பாக அவரே தன் வேதனையைத் தெரிவித்த போது, “ நேர்மையாகக் கூற  வேண்டுமெனில் இந்தியா ஏ அணியில் தேர்வு ஆவேன் என்றே நினைத்தேன். ஆனால் ஆச்சரியமாக இருந்தது நான் தேர்வாகவில்லை, இந்த விஷயங்கள் நம் கையில் இல்லை என்று விட்டுவிட்டேன்.  எனவே ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும் போதும் அதை மனதில் வைத்து அணிக்காக ஆடுகிறேன்.

நான் என் உள்ளுணர்வின் உந்துதலின்படி ஆடுகிறேன். இந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து ஆடுவதில்லை. ஆதுவாக வருவதுதான், நல்ல பிட்சில் நல்ல அவுட் ஃபீல்ட் இருக்கும் போது அடிக்க வேண்டிய பந்தை அடித்து விடுகிறேன். ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வேகமாக ஓடுகிறேன். ஒவ்வொரு ரன்னையும் முயற்சி செய்துதான் எடுக்கிறேன்” என்றார்.   விஜய் ஹசாரே டிராபியில் 8 இன்னிங்ஸ்களில் 325 ரன்கள் பங்களிப்பு தமிழக அணியை இறுதிப்போட்டிக்கு இட்டுச் சென்றது.

Also Read : ரோஹித் சர்மா-தவான் சாதனை உடைப்பு, விராட் கோலி கேப்டன்சி சாதனை சமன்: பாபர் அசாம் அட்டகாசம்

மேலும் “எனக்கு தினேஷ் கார்த்திக்தான் பெரிய இன்ஸ்பிரேஷன். நிறைய முறை இந்திய அணிக்குள் வந்துள்ளார். இந்த வயதில் இன்னொரு கம்-பேக் அவருக்கு, உலகக்கோப்பையில் ஆடுகிறார்”. தினேஷ் கார்த்திக் பாபா இந்திரஜித் பற்றி கூறுவதே இந்திரஜித்தின் திறமைக்குச் சான்று: “ஆச்சரியகரமான இந்த வீரரின் இன்னொரு உயர் தரமான சதம். அதுவும் தீவிரமாக ஆடப்படும் துலீப் கோப்பை இறுதிப் போட்டியில். இதுவரை முதல் தரக் கிரிக்கெட்டில் என்ன மாதிரியான ரெக்கார்ட் வைத்துள்ளார், ஆச்சரியம். இந்திய அணியில் இவரை அழைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை” என்றார் தினேஷ் கார்த்திக். செலக்டர்கள் காதில் விழுமா? பொறுத்திருந்து பார்ப்போம்

Published by:Raj Kumar
First published:

Tags: Cricket, Cricketer, Indian cricket team