ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கோலி-ரோகித் இடையே என்ன பிரச்சனை?- அசாருதீன் சொல்லலாமே’

கோலி-ரோகித் இடையே என்ன பிரச்சனை?- அசாருதீன் சொல்லலாமே’

sunil gavaskar

sunil gavaskar

கோலி-ரோகித் சர்மா இடையே மோதல் போக்கு, ஈகோ இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது சுனில் கவாஸ்கரை பொறுத்தவரை நம்பகத்தன்மை இல்லாததே. கோலி தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரிலிருந்து விலகியது தொடர்பாக முன்னாள் கேப்டன் அசாருதீன், இந்த விலகல் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதை அம்பலப்படுத்துகிறது என்று கூறியதை கவாஸ்கர் ஏற்கவில்லை.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கோலி-ரோகித் சர்மா இடையே மோதல் போக்கு, ஈகோ இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது சுனில் கவாஸ்கரை பொறுத்தவரை நம்பகத்தன்மை இல்லாததே. கோலி தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரிலிருந்து விலகியது தொடர்பாக முன்னாள் கேப்டன் அசாருதீன், இந்த விலகல் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதை அம்பலப்படுத்துகிறது என்று கூறியதை கவாஸ்கர் ஏற்கவில்லை.

  த்ரோ டவுன் பயிற்சியில் ரோகித் சர்மாவின் கையில் அடிப்பட்டதோடு, ஹாம்ஸ்ட்ரிங் காயமும் இருப்பதால் டெஸ்ட் தொடரிலிர்ந்து ரோகித் ஷர்மா விலகினார், உடனேயே மகள் வாமிகாவின் முதல் பர்த் டே தொடர்பாக கோலி தானும் ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

  இது தொடர்பாக அசாருதீன் நேற்று செய்த ட்வீட்டில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் விளையாடமுடியாததை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கோலி ஓய்வுஎடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால், அதற்கான கால நேரம்தான் சரியில்லை. இருவருக்கும் இடையிலான பிளவு குறித்த ஊகங்களை இந்த செயல் உறுதிசெய்கிறது. இருவருமே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டை விட்டுக்கொடுக்காதவர்கள்” எனத் தெரிவித்தார்.

  இதனையடுத்து சுனில் கவாஸ்கர், “கோலிக்கும் ரோகித்துக்கும் இடையே உரசல் இருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. இரண்டு வீரர்களும் இது தொடர்பாக வெளிப்படையாக மனம் திறந்து பேசினாலே தவிர நாம் இதைப்பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

  ஆம் அசாருதீன் ஏதோ சொல்கிறார், உண்மையாக அவருக்கு ஏதாவது உள்தகவல் கிடைத்திருந்தால் அதை வெளிப்படையாக பட்டவர்த்தனமாக போட்டு உடைக்கட்டுமே. என்ன நடந்தது என்று நமக்கு தெரிவிக்கலாமே.

  இதையும் படிங்க: இதே தினத்தில் அன்று- இந்தியா 414 ரன்கள், இலங்கை 411- தோனி கேப்டன்சியில் அபார வெற்றி

  அதுவரையில் நான் சந்தேகத்தின் சாதக பலனை கோலி, ரோகித் சர்மா இருவர் சார்பாகவுமே வழங்குவேன். இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்குப் பிரமாதமாக சேவையாற்றியவர்கள். எனவே நம்மில் எவரும் துல்லியமான தகவல் இல்லாமல் அவர்கள் இருவரை நோக்கி விரலை சுட்டுவது கூடாது என்றே கருதுகிறேன்” என்றார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Rohit sharma, Virat Kohli