பந்து பவுண்டரி போன கனவில் இருந்த அசார் அலி ரன் அவுட் - வைரல் வீடியோ

news18
Updated: October 18, 2018, 7:48 PM IST
பந்து பவுண்டரி போன கனவில் இருந்த அசார் அலி ரன் அவுட் - வைரல் வீடியோ
ஆஸ்திரேலிய வீரர் ரன் அவுட் செய்யும் காட்சி
news18
Updated: October 18, 2018, 7:48 PM IST
அபுதாபியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி, பந்தை சரியாக கவனிக்காமல் ரன் அவுட் ஆன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபி நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 282 ரன்களும் ஆஸ்திரேலியா 145 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 400 ரன்கள் எடுத்து தனது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

538 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாக உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்சில் மூன்றாவது நபராக களமிறங்கிய அசார் அலி இன்றையை சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளார்.


ஆஸ்திரேலிய பவுலர் வீசிய பந்தை அசார் அலி ஸ்லிப் திசையில் தூக்கி அடித்தார். பீல்டர்களை ஏமாற்றி பந்து தேர்ட் மேன் பகுதிக்கு சென்றது. பவுண்டரி எல்லையை நோக்கி வேகமாக சென்ற பந்து எல்லையை தொடும் முன்னரே சிறிது தூரத்தில் நின்றுவிட்டது. ஆனால், பந்து பவுண்டரியை தொட்டு விட்டதாக நினைத்து அசார் அலியும், எதிர்முனையில் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் ஆசாத் சபீக்கும் களத்தின் நடுவில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

பவுண்டரிக்கு முன்னரே நின்ற பந்தை எடுத்த ஸ்டார்க் கீப்பருக்கு தூக்கி எறிய, கீப்பர் டிம் பெய்ன் ரன் அவுட் செய்தார். ஆனால், பவுண்டரிக்கு பந்து செல்லாததே அசார் அலிக்கு பின்னர் தான் தெரிய வந்தது. 64 ரன்கள் எடுத்த நிலையில், அவர் சோகமாக வெளியேறினார். இந்த ரன் அவுட் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

First published: October 18, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...