கோலி கிட்ட கம்முனு இருந்தா ஜம்முனு இருக்கலாம்: டூ ப்ளெசிஸ் அறிவுரை!

Avoid Confrontation With Kohli, Du Plessis Tells Australia | விராட் கோலியுடன் தென்னாஃப்ரிக்காவில் நாங்கள் வாக்குவாதம் செய்யவில்லை. இருந்தாலும், சென்சுரியனில் அவர் சதமடித்தார். அதனால், மோதலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது என்று டூ ப்ளெசிஸ் ஆஸி. வீரர்களுக்கு அறிவுரை கூறினார்.

கோலி கிட்ட கம்முனு இருந்தா ஜம்முனு இருக்கலாம்: டூ ப்ளெசிஸ் அறிவுரை!
கோலியுடன்(இடது) டூ ப்ளெசிஸ் (Twitter/BCCI)
  • News18
  • Last Updated: November 17, 2018, 6:38 PM IST
  • Share this:
இந்திய அணியை எளிதில் வீழ்த்த வேண்டும் என்றால் கேப்டன் கோலியிடம் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணிக்கு தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ ப்ளெசிஸ் அறிவுரை கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி பிரிஸ்பேன் நகரில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கிடையே, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாஃப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டூ ப்ளெசிஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


டாஸ் போடும் டூ ப்ளெசிஸ் அருகில் கோலி (AFP)


அப்போது அவர் இந்தியாவின் சுற்றுபயணம் குறித்து கூறுகையில், “சர்வதேச போட்டிகளில் என்னைப்போன்ற சில வீரர்களுக்கு மோதலில் ஈடுபடுவது மிகவும் பிடிக்கும். அதே மனநிலையில் தான் விராட் கோலியும் இருக்கிறார். அவரிடம் வாக்குவாதம் செய்தால் அதுவும் ஒரு உந்துதலாக மாறிவிடும்.” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ கோலியுடன் தென் ஆப்ரிக்காவில் நாங்கள் வாக்குவாதம் செய்யவில்லை. இருந்தாலும், சென்சுரியனில் அவர் சதமடித்தார். அதனால், அவரிடம் மோதலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது” என்று அவர் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவுரை கூறினார்.

சதம் அடித்ததை கொண்டாடும் கோலி (AFP)
கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என இழந்தது. இருப்பினும், சிறப்பாக விளையாடிய விராட் கோலி 286 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரின் சராசரி 47.66 ஆக இருந்தது.

Also See...

First published: November 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்