ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபிஞ்ச் அதிரடியால் 2-வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் உடன் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, ஷார்ஜாவில் நேற்று (மார்ச் 24) நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முகமது ரிஸ்வான் (115), சோயிப் மாலிக் (60) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது.
285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பொறுமையாக விளையாடிய கவாஜா (88) அரைசதம் அடித்து அவுட்டானார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 19 ரன்களில் வெளியேறி சொதப்பினார். ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக ரன் சேர்த்த கேப்டன் ஃபிஞ்ச், சதமடித்து அசத்தினார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 153 ரன்கள் குவித்த ஃபிஞ்ச் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Aussies cruise to 2-0 series lead thanks to record Finch-Khawaja stand. Highlights, and report from @LouisDBCameron in Sharjah: https://t.co/9uEQsDxJ04 #PAKvAUS pic.twitter.com/ynq7VV5HZQ
— cricket.com.au (@cricketcomau) March 24, 2019
இந்த வெற்றியின்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
தோனியின் 6 ஆண்டுகள் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!
இமாலய மைல்கல்லை விரட்டும் சிக்சர் மன்னன் கெய்ல்... இன்னும் 6 ரன்கள்தான் தேவை!
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aus vs Pak, ODI