ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி தடுமாறி வருகிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி 2 நாட்களில் முடிந்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள், வல்லுனர்களின் கவனத்தை பெற்றது.
மெல்போர்னில் நடந்த 2ஆவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த புதன் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 2 நாட்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்களை எடுத்திருந்தது.
அந்த அணியின் உஸ்மான் கவாஜா 195 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 104 ரன்களும், ஹெட் 70 ரன்களும் எடுத்தனர். நேற்று மழை காரணமாக 3ஆவது நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இந்நிலையில் இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றபோது, டிக்ளேர் செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது.
இதையடுத்து 4ஆவது நாளில்தான் தங்களது முதல் இன்னிங்சை தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ஆடத் தொடங்கினர். கேப்டன் டீல் எல்கர் 15 ரன்னிலும், சாரெல் எர்வீ 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்துவந்த ஹென்ரிக் கிளாசன் 2 ரன்களில் வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்த பவுமா35 ரன்களும், கயா ஜோண்டோ 39 ரன்களும் எடுத்தனர்.
இன்றைய 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 59 ஓவர்களை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்துள்ளது. நாளை கடைசிநாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்… தீவிர பயிற்சியில் கே.எல்.ராகுல்…
கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைவதற்கான வாய்ப்புகளே இல்லை. தற்போதைய சூழலில் ஆஸ்திரேலியாவை விட தென்னாப்பிரிக்கா 326 ரன்கள் பின்தங்கியுள்ளது.
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக தொடர்கிறார் சேத்தன் சர்மா… புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
நாளை தொடக்கத்திலேயே அந்த அணி விக்கெட்டுகளை இழந்தால் ஃபாலோ ஆன வாய்ப்புள்ளது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா சிறப்பாக பந்துவீசி தென்னாப்பிரிக்காவை ஆட்டமிழக்க செய்தால் வெற்றி பெற்றுவிடும்
இதனால் ஆட்டத்தை டிரா செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யவுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket