• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நியூஸிலாந்தை நொறுக்கிய ஆஷ்டன் ஆகர்; மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய வெற்றி

நியூஸிலாந்தை நொறுக்கிய ஆஷ்டன் ஆகர்; மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய வெற்றி

6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஷ்டன் ஆகர்.

6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஷ்டன் ஆகர்.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து, ஆஷ்டன் ஆகர் 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, 144 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது.

  • Share this:
வெலிங்டனில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து, ஆஷ்டன் ஆகர் 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, 144 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது.

ஆஷ்டன் ஆகர் 7 பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணியில் டாஸ்மேனிய வேகப்பந்து வீச்சாளர் ரைலி மெரிடித் அறிமுகமானார்.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஆனால் கேப்டன் பிஞ்ச் மற்றும் ஜோஷ் பிலிப் பிரமாதமாக ஆடி 51 பந்துகலில் 83 ரன்களைச் சேர்த்தனர். 27 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சர் விளாசி 43 ரன்களில் லெக் ஸ்பின்னர் இஷ் சோதியிடம் (2/32), ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு மேக்ஸ்வெல் காட்டுத்தனமான அதிரடியில் இறங்கினார். இவரும் பிஞ்சும் இணைந்து 35 பந்துகளில் 64 ரன்களை விளாசினர். 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 44 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார் பிஞ்ச். இவரும் சோதி பந்தில் வெளியேற.

கடைசி ஓவர்களில் மேக்ஸ்வெல் வெளுத்து வாங்கினார். 8 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 31 பந்துகளில் 70 ரன்களை அவர் குவித்து டிம் சவுதி (1/37) யிடம் ஆட்டமிழந்தார். ஆனால் அதற்குள்ளாகவே நியூஸிலாந்து எட்ட முடியாத ரன் எண்ணிக்கையில் கொண்டு நிறுத்தினார். ஆஸ்திரேலியா 208 ரன்களைக் குவித்தது.

நியூஸிலாந்து இலக்கை விரட்டிய போது அறிமுக பவுலர் ரைலி மெரிடித், டிம் செய்ஃபர்ட் மற்றும் கேன் வில்லியம்சனை விரைவில் வெளியேற்றினார். வில்லியம்சன் 9 ரன்களில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

ஆனால் மார்டின் கப்தில் (28 பந்தில் 43 ரன்) பவர் ப்ளேயில் அபாரமாக ஆடினார் அவரும் டெவன் கான்வே (27 பந்துகளில் 38), ஆகியோர் நம்பிக்கை அளித்து ஸ்கோரை 80/2 என்று கொண்டு சென்றனர். அப்போது கப்தில், ஸாம்பா பந்தில் ஆகர் கேட்சுக்கு வெளியேறினார். ஆனால் அதன் பிறகு ஆஷ்டன் ஆகர் புகுந்தார். கிளென் பிலிப்ஸ், கான்வே, ஜேம்ஸ் நீஷம், ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தினார், அடுத்த ஓவரில் டிம் சவுத்தியை வீழ்த்தினார்.

கடைசியில் மார்க் சாப்மேன் (18), கைல் ஜேமிசன் (11) கொஞ்சம் நின்று பார்த்தனர். ஆனால் இருவரையும் ஆகர் வீழ்த்தி முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசியில் சோதியை தன் பந்து வீச்சில் தானே கேட்ச் எடுத்து கேன் ரிச்சர்ட்ஸன் வீழ்த்த ஆஸ்திரேலியா மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது, இன்னும் 2 போட்டிகள் உள்ளன. ஆட்ட நாயகனாக ஆஷ்டன் ஆகர் தேர்வு செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: