முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பெத் மூனி நியமனம்

மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பெத் மூனி நியமனம்

பெத் மூனி

பெத் மூனி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 ப்ரீமியர் தொடராக பிக் பேஷ் லீக்கிலும் பெத் மூனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வீராங்கனையாக இருக்கும் பெத் மூனியின் நியமனம் குஜராத் அணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னரும், ஆல் ரவுண்டருமான ஸ்னே ரானா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட்டராக பெத் மூனி கருதப்படுகிறார். விக்கெட் கீப்பராக இருக்கும் பெத் மூனி 2018, 2020 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.  ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 ப்ரீமியர் தொடராக பிக் பேஷ் லீக்கிலும் பெத் மூனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொடரில் 2 சதங்களும், 18 அரைச்சதங்களும் அவர் விளாசியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 83 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2,350 ரன்களை அவர் எடுத்துள்ளார். குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித் பெத் மூனி அளித்துள்ள பேட்டியில், ‘குஜராத் அணியை வழி நடத்தும் வாய்ப்பை எனக்கு அணி நிர்வாகம் அளித்துள்ளது. இதனை மகிழ்ச்சியாகவும், கவுரவமாகவும் உணர்கிறேன். குஜராத் அணியின் திறமையான வீராங்கனைகள் உள்ளனர். நிச்சயமாக இந்த தொடர் மிகப்பெரும் வெற்றியைப் பெறும். கோப்பையை வெல்வதற்கு குஜராத் அணி கடுமையாக போராடும். மிதாலி ராஜ், ரச்சேல் ஹேன்ஸ், நூஷின் அல் காதிர் ஆகியோரும் அணியில் இருப்பது எங்களுக்கு கூடுதல் பலம்’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket