Home /News /sports /

பரிசுத் தொகையை இலங்கை மக்களுக்கே நன்கொடை அளித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி

பரிசுத் தொகையை இலங்கை மக்களுக்கே நன்கொடை அளித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீண்டுமொரு நெகிழ்ச்சியான செயலைச் செய்துள்ளனர், சமீபத்தில் இலங்கைக்கு கிரிக்கெட் ஆடச் சென்ற போது கிடைத்த பரிசுத்தொகைகளை இலங்கை பொருளாதார நெருக்கடிக்கான நன்கொடையாக அளித்து விட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீண்டுமொரு நெகிழ்ச்சியான செயலைச் செய்துள்ளனர், சமீபத்தில் இலங்கைக்கு கிரிக்கெட் ஆடச் சென்ற போது கிடைத்த பரிசுத்தொகைகளை இலங்கை பொருளாதார நெருக்கடிக்கான நன்கொடையாக அளித்து விட்டனர்.

    இதனை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஜூலை 11 வியாழன் அன்று தெரிவித்துள்ளது. “இலங்கை நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக, எங்கள் ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி, சமீபத்திய இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் கிடைத்த பரிசுத் தொகையை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்” என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

    இந்த நன்கொடையை ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ், யுனிசெஃப் ஆஸ்திரேலிய தூதுவர் மற்றும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக இருக்கும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் வழங்கியுள்ளனர். மொத்தம் 45,000 ஆஸ்திரேலியா டாலர்கள் (ரூ.25,36,294 ) ஆஸ்திரேலிய அணியால் நன்கொடையாக வழங்கப்படுகிறது.

    தன் இலங்கைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த ஆஸ்திரேலியா அணி T20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தாலும், இலங்கை அணி ஒருநாள்தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதேநேரம் டெஸ்ட் தொடர் 1-1 என டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த நெகிழ்ச்சியான செயல் அவர்களை இலங்கை ரசிகர்களிடத்தில் பெரிய அளவில் மரியாதையையும் அன்பையும் ஈர்த்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Australia, Cricket, Sri Lanka

    அடுத்த செய்தி