#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்!

Australian pacer #JhyeRichardson ruled out #WorldCup2019 | ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்!
வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன். (Cricket Australia)
  • News18
  • Last Updated: May 8, 2019, 12:42 PM IST
  • Share this:
உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் திடீரென விலகியுள்ளார்.

12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த தொடருக்கான ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் இடம் பெற்றிருந்தார்.





இந்நிலையில், ஷார்ஜாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயம் முழுமையாக குணமடையாததால் உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

Jhye Richardson, ஜெய் ரிச்சர்ட்சன்
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன். (AP)


ஜெய் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக ஹேசில்வுட்டை சேர்க்கலாம் என முதலில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அவரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading