ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் எல்கர் மற்றும் சாரெல் எர்வி ஆகியோர் களத்தில் இறங்கினர்.
இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில் எர்வி 18 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த டி ப்ரூன் 12 ரன்களிலும், பவுமா 1 ரன்னிலும் வெளியேறினர்.
‘அஷ்வின் ஒரு சைன்டிஸ்ட்…’ – வைரலாகும் சேவாக்கின் பதிவு…
சிறிது நேரம் தாக்கு பிடித்த கேப்டன் எல்கர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர், 5 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்து தென்ஆப்பிரிக்க அணி தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது விக்கெட் கீப்பர் வெரேனுடன், மார்க்கோ ஜேன்சன் இணைந்து பொறுப்புடன் விளையாடி னர்.
இந்த கூட்டணியை பிரிக்க ஆஸ்திரேலிய பவுலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாக பலனளிக்கவில்லை. இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வெரேன் 52 ரன்களிலும், மார்க்கோ ஜேன்சன் 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் கேமரூன் கிரீன் எடுத்தார்.
அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, தென்ஆப்பிரிக்க அணி 68.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய பவுலர்களில் கேமரூன் க்ரீன் 10.4 ஓவர்கள் மட்டுமே வீசி 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள்… கபில்தேவ் சாதனையை முறியடித்த அஷ்வின்…
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 12 ஓவர் முடிவில் 45 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இத்துடன் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. டேவிட் வார்னர் 32 ரன்களுடனும், மார்னஸ் லபுஸ்சேன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 5 விக்கெட்டுகளை எடுத்துள்ள ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணி சமீபத்தில் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket