Home /News /sports /

ரஹானேயின் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்: நெகிழ்ச்சியில் புகழ்ந்து தள்ளும் ஆஸி. ஊடகங்கள்

ரஹானேயின் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்: நெகிழ்ச்சியில் புகழ்ந்து தள்ளும் ஆஸி. ஊடகங்கள்

ரஹானே-நேதன் லயன்.

ரஹானே-நேதன் லயன்.

குறிப்பாக சிராஜ் போன்ற இளம் வீரரை நிறவெறி வசைக்கு உட்படுத்திய பிறகு ரஹானேவின் இந்தச் செய்கை அவரது மதிப்பை மட்டுமல்ல இந்தியாவின் மதிப்பையே உயர்த்தியுள்ளது என்கின்றனர் ஆஸி. கிரிக்கெட் வட்டாரத்தினர்.

    அடிலெய்ட் தோல்விக்குப் பிறகு தெனாவட்டுடன் பேசித்திரிந்த ஆஸ்திரேலிய அணிக்கு 2-1 என்ற வெற்றியுடன் அதிர்ச்சி மருத்துவம் அளித்த கேப்டன் ரஹானேவின் இந்திய அணி, பிறகு நல்ல ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்பையும் வெளிப்படுத்தியது.

    ஆட்டம் முடிந்து பேட்டியிலேயே ரஹானே தெரிவித்திருந்தார், அதாவது 100 டெஸ்ட் களம் கண்ட நேதன் லயனுக்கு இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சி ஒன்றை பரிசாக அளிக்கப்போகிறோம் என்று கூறியிருந்தார்.

    அதன்படியே நேதன் லயனிடம் வெற்றிக் கேப்டன் ரஹானே இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்ஸியை கையளித்த செய்கை ஆஸி. ஊடகங்களில் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.

    நேதன் லயன் மீது ரஹானேவுக்கு உள்ள அன்பையும் மதிப்பையும் இது காட்டுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் ரஹானேவை புகழ்ந்து தள்ளி வருகின்றன. ஆஸ்திரேலிய மக்களிடையே, ரசிகர்களிடையே ரஹானேவின் பிம்பம் உயர்ந்து நிற்பதாக ஆஸி. ஊடகங்கள் இதனை விதந்தோதி வருகின்றன.

    இந்த டெஸ்ட் போட்டியில் எப்படியாவது 400 விக்கெட்டுகளை வீழ்த்த அவர் முயற்சி செய்தார், ஆனால் இந்திய வீரர்கள் அவரது கனவை நிறைவேற்றவில்லை, மாறாக தோல்வியையே பரிசாக அளித்தது. ஆனால் களம்வேறு, களத்துக்கு வெளியே நட்புறவு என்பது வேறு என ரஹானே அவர்களுக்குக் காட்டியுள்ளார்.

    இந்த தொடரில் லயன் 9 விக்கெட்டுகலை 55.11 என்ற சராசரியில் எடுத்தது அவருக்கு ஒரு பின்னடைவே.

    இந்திய அணியின் முன்னாள் வீரர் லஷ்மணும், ரஹானேவின் இந்த மதிப்புக்குரிய நல்லுணர்வை பாராட்டியுள்ளார்.

    வெளிநாடுகளுக்கு அணியுடன் செல்லும் கேப்டன்கள் நாட்டின் தூதர் போல் பாவிக்கப்படுகிறார்கள், அந்த வகையில் ரஹானேவின் செய்கை இருநாட்டு கிரிக்கெட் உறவுகளை மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, மக்களிடையேயும் நல்லுறவைப் பேணும் செய்கை என்று பல ஆஸி. ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.

    குறிப்பாக சிராஜ் போன்ற இளம் வீரரை நிறவெறி வசைக்கு உட்படுத்திய பிறகு ரஹானேவின் இந்தச் செய்கை அவரது மதிப்பை மட்டுமல்ல இந்தியாவின் மதிப்பையே உயர்த்தியுள்ளது என்கின்றனர் ஆஸி. கிரிக்கெட் வட்டாரத்தினர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ajinkya Rahane, India vs Australia, Rahane

    அடுத்த செய்தி