கோலி & டீமை அவமானப்படுத்திய ஊடகம் மீது ஆஸி. ரசிகர்கள் பாய்ச்சல்!

#AUSvIND | ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சாதனைகளை பட்டியலிட்டும் சிலர், நாளிதழ் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோலி & டீமை அவமானப்படுத்திய ஊடகம் மீது ஆஸி. ரசிகர்கள் பாய்ச்சல்!
இந்திய கிரிக்கெட் அணி
  • News18
  • Last Updated: December 4, 2018, 8:22 AM IST
  • Share this:
இந்திய அணி பேட்ஸ்மேன்களை பயந்தவர்கள் என்று குறிப்பிடும் வகையில் செய்தி வெளியிட்ட செய்தி நாளிதழுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பா் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

பொதுவாகவே இங்கிலாந்து, இந்தியா போன்ற முக்கிய அணிகள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் போது, அந்நாட்டு ஊடகங்களும் சரி, வீரர்களும் சரி ஏதாவது ஒன்று கூறி உளவியல் ரீதியாக எதிரணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.


களத்தில் பேட்டிங் செய்யும் எதிரணி பேட்ஸ்மேனை வசவுபாடி அவரது நிதானத்தை குலைப்பது, மோசமான பார்ம், பயப்படுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டு எதிரணி வீரரை தூண்டிவிடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள்.

இந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாட பயப்படுவார்கள் என்று பொருள்படும் விதமாக, "The Scaredy Bats" என்று தலைப்பிட்டு அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி இந்திய ரசிகர்களை ஆத்திரமூட்டியது. இதனால், அவர்கள் கண்டபடி விமர்சிக்கத் தொடங்கினர்.ஆஸ்திரேலியாவின் சில பத்திரிகையாளர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் நாளிதழ் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டுக்கு வருகை தரும் ஒரு வெளிநாட்டு அணியை இப்படியா வரவேற்பது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சாதனைகளை பட்டியலிட்டும் சிலர், நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Also See.. செல்ல மகளிடம் நடனம் கற்கும் தோனி

First published: December 4, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்