ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பவுண்டரி எல்லைக்குள் கால் வைத்தும் சிக்ஸ் ஆகாதபடி கேட்ச் பிடித்த ஆஸ்திரேலிய வீரர்! வைரல் வீடியோ

பவுண்டரி எல்லைக்குள் கால் வைத்தும் சிக்ஸ் ஆகாதபடி கேட்ச் பிடித்த ஆஸ்திரேலிய வீரர்! வைரல் வீடியோ

கிரிக்கெட்

கிரிக்கெட்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் அந்நாட்டு வீரர் டாம் கூப்பர் பவுண்டரி எல்லைக்கு வெளியேவரை சென்று கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியாவில் 2011-ம் ஆண்டிலிருந்து பிக் பாஷ் லீக் டி-20 தொடர் நடைபெற்றுவருகிறது. அதில், உள்நாட்டு அணிகள் மோதிவருகின்றன. தற்போது நடைபெற்றுவரும் தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடலெய்டு ஸ்டைரக்கர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனகேட்ஸ் ஆகிய அணிகள் மோதின.

அதில் அடலெய்டு ஸ்டைரக்கர்ஸ் அணி வீரர் பிலிப் சால்ட் அடித்த பந்தை மிகச் சிறப்பாக கேட்ச் பிடித்தார் டாம் கூப்பர். பிலிப் சால்ட் சிக்ஸ் அடிப்பதற்கு முயற்சி செய்து தூக்கி அடித்தார். அந்தப் பந்தை தாவிப் பிடித்த டாம் கூப்பர் தடுமாறி பவுண்டரி எல்லையைத் தாண்டினார்.

ஆனால், கால் எல்லையைத் தாண்டுவதற்குள்ளா பந்தை மேலே நோக்கி வீசிவிட்டு பின்னர் மைதானத்துக்குள் வந்து பந்தைப் பிடித்து அசத்தினார். அந்தக் கேட்சையும் மிக எளிதாகப் பிடித்தார். மிகச் சிறந்த கேட்சாக பதிவாகியுள்ள டாம் கூப்பரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Also see:

 

First published:

Tags: Cricket