ஆடை அவிழ்ந்த போதும் ரன் அவுட் செய்த கிரிக்கெட் வீரர் - வீடியோ

ஆடை அவிழ்ந்த போதும் ரன் அவுட் செய்த கிரிக்கெட் வீரர் - வீடியோ
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2019, 5:37 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியில் மார்னஸ் லாபுசாக்னே ரன்அவுட் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியில் விக்டோரியா - குயின்லாண்ட் அணிகள் மோதின. இந்த போட்டியில் விக்டோரியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. போட்டியின் 29 வது ஓவரில் விக்டோரியா அணி வீரர் ஆஃப் திசையில் பந்தை வேகமாக அடித்து சிங்கிள் ரன் எடுக்க முயற்சித்தார்.

அப்போது மார்னஸ் வேகமாக பாய்ந்து சென்ற பந்தை தடுத்து ரன் அவுட் செய்வார். இந்த வீடியோ தற்போது வைரலாகிறது. இதற்கு காரணம் மார்னஸ் அணிந்திருந்த பேன்ட் பந்தை பிடிக்கும் முயற்சியில் பாதி அவிழ்ந்துவிட்டது.  பேன்டை சரிசெய்யாமல் பந்தை உடனே எறிந்து ரன்அவுட் செய்தார்.

 
View this post on Instagram
 

No pants, no worries for @marnus3 with this cheeky #MarshCup run-out 🤭


A post shared by cricket.com.au (@cricketcomau) on


இந்த வீடியோவை ஆஸ்திரேலியா அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த போட்டியில் குயின்ஸ்லாண்ட் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Also Watch

First published: September 30, 2019, 5:37 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading