முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்திய வீரர் புஜாராவுக்கு சிறப்பு பரிசு வழங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள்… என்ன காரணம் தெரியுமா?

இந்திய வீரர் புஜாராவுக்கு சிறப்பு பரிசு வழங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள்… என்ன காரணம் தெரியுமா?

புஜாரா - கம்மின்ஸ்

புஜாரா - கம்மின்ஸ்

குறிப்பிடத்தகும் வகையில், தனது 100 ஆவது போட்டியில் இந்திய அணியின் வின்னிங் ஷாட்டை அடிக்கும் வாய்ப்பை புஜாரா பெற்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் பேட்ஸ்ன் சேதேஷ்வர் புஜாராவுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக இருப்பவர் புஜாரா. தற்போது நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியானது, புஜாரா பங்கேற்ற 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். சர்வதேச அளவில் குறைவான வீரர்களே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர்.

தொடர்ச்சியாக ஃபார்மில் இருப்பது, ரன்களை குவிக்கும் திறன், விக்கெட்டை காப்பாற்றும் திறமை உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே டெஸ்ட்டில் ஒருவரால் 100 போட்டிகளில் விளையாட முடியும். இந்நிலையில் 100 போட்டிகளில் விளையாடியுள்ள புஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆட்டோகிராஃப் செய்த டீ ஷர்ட்டை புஜாராவுக்கு வழங்கினர். இதனை வீரர்கள் சார்பாக அணியின் கேப்டன் பாட்  கம்மின்ஸ் புஜாராவிடம் வழங்கினார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் அளித்த சிறப்பு பரிசு தொடர்பான பிசிசிஐயின் ட்விட்டர் பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும், குறிப்பிடத்தகும் வகையில், தனது 100 ஆவது போட்டியில் இந்திய அணியின் வின்னிங் ஷாட்டை அடிக்கும் வாய்ப்பை புஜாரா பெற்றார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 7052 ரன்களை குவித்துள்ளார். இதில் 10 சதங்களும், 34 அரைச்சதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 206 ரன்கள். ஆனால், புஜாரா விளையாடியுள்ள சர்வதேச ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை 5 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket