கொரோனோ வைரஸ் பரவல் ஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆடவர், மகளிர் அணிக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
ஆடவர் அணி ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 9-ம் தேதி, இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 12-ம் தேதி, மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 15 ம் தேதி Townsville -ல் நடைபெறவுள்ளது. முதல் இரண்டு போட்டிக்கு இன்னும் மைதானம் முடிவாகவில்லை.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 21 முதல் 25 வரை பெர்த் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா - இந்தியா நான்கு போட்டி டெஸ்ட் தொடர்
1. முதல் போட்டி - டிசம்பர் 3-7 : பிரிஸ்பென்
2. இரண்டாவது போட்டி - டிசம்பர் 11-15 - அடிலெய்ட் (பகல் - இரவு டெஸ்ட்)
3. மூன்றாவது போட்டி - டிசம்பர் 26-30 : மெல்பேர்ன் (பாக்ஸிங் டே டெஸ்ட்)
4. நான்காவது போட்டி - ஜனவரி 3-7 : சிட்னி
ஆஸ்திரேலியா - இந்தியா மூன்று போட்டி ஒருநாள் தொடர்
1. ஜனவர் 12 - பெர்த்
2. ஜனவரி 15 - மெல்பேர்ன்
3. ஜனவதி 17 - சிட்னி
இந்திய அணியுடனான போட்டியைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2021 ம் ஆண்டு அக்டோபர் 4, 6, 9 ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 2021 அக்டோபர் மாதம் 11, 14, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. 2022 ம் ஆண்டு ஜனவரி 26, 29, 31 ம் தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், பிப்ரவரி 2 சிட்னியில் டி-20 போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.