• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆகஸ்ட் 9, 2021 - கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு கருப்பு நாள்

ஆகஸ்ட் 9, 2021 - கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு கருப்பு நாள்

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி

ஆகஸ்ட் 9, 2021 - கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு கருப்பு நாளாக மாறி உள்ளது. ஜாம்பவான் நிறைந்த ஆஸ்திரேலிய அணி டி20 போட்டியில் பாதளாத்தில் வீழ்ந்து உள்ளது.

  • Share this:
    கிரிக்கெட் உலகில் அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொர்ப்பணமாக விளங்கும் அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான். டெஸ்ட், ஒரு நாள், டி20 என 3 வடிவங்களான போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது என்பது எளிதான ஒன்றல்ல. அப்படி ஆலமரமாக ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்ற ஆஸ்திரேலியாவை வங்கதேசம் என்னும் கோடாளி அடியொடு சாய்த்து விட்டது.

    வங்கதேசத்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவே என்ற தேவையற்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் 2005-ம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 79 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ரன்னாக இருந்தது.

    Also Read : இங்கிலாந்து கிரேட் எஸ்கேப்: துரதிர்ஷ்ட ட்ரா குறித்து கோலி என்ன கூறுகிறார்?

    ஆஸ்திரேலிய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வங்கதேசம் சென்றது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேசம் தொடரை கைப்பற்றியது. 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய படுத்தோல்வி அடைந்து வரலாற்றில் மோசமான சாதனையும் படைத்தது.

    Also Read : கண்ணான கண்ணே வாமிகா; உன்னைப் பார்க்க என் தந்தை இல்லையே- விராட் கோலி உணர்ச்சிகரம்

    ஐந்தாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் வங்கதேச பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். ஆஸ்திரேலியா இறுதியாக 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் உல் ஹசன் 4 விக்கெட்களையும், முகமது சைப்உதின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: