முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சொந்த ஊருக்கு திடீர் பயணம்… காரணம் என்ன தெரியுமா?

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சொந்த ஊருக்கு திடீர் பயணம்… காரணம் என்ன தெரியுமா?

பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் 1ஆம் தேதி இந்தூரில் தொடங்கவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரிலும், 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியிலும் நடந்து முடிந்துள்ளன. இவை இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி அணியாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியால் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் 3 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த ஊருக்கு நேற்று கிளம்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக கம்மின்ஸ் தாயகம் திரும்பியுள்ளதாகவும், 3ஆவது டெஸ்டில் அவர் இணைந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளது. குடும்பத்தினருக்கு உடல் நல பாதிப்பு காரணமாக அவர்களை பார்ப்பதற்காக பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார்.

டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் 1ஆம் தேதி இந்தூரில் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது. இவ்விரு வெற்றிகளின் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

First published:

Tags: Cricket