ஆஸி. அணியின் பேட்டிங்கும் பலவீனம்தான்: இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் சுனில் கவாஸ்கர்
அடிலெய்ட் தோல்வி ஒரு துர்க்கனவு என்று வர்ணித்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இதிலிருந்து மீண்டு வர முடியும் என்பதை இந்திய வீரர்கள் நம்ப வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

சுனில் கவாஸ்கர்
- News18 Tamil
- Last Updated: December 22, 2020, 8:45 AM IST
அடிலெய்ட் தோல்வி ஒரு துர்க்கனவு என்று வர்ணித்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இதிலிருந்து மீண்டு வர முடியும் என்பதை இந்திய வீரர்கள் நம்ப வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
36 ஆல் அவுட் துர்க்கனவிலிருந்து வெளியே வரவில்லை எனில், நல்ல மனநிலையில் ஆடவில்லை எனில், 4 டெஸ்ட்களிலும் தோற்று ஒயிட்வாஷ் வாங்க வேண்டியதுதான் என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் கூறியபோது, “மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக லோகேஷ் ராகுலை இறக்க வேண்டும். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது. ஒன்று பிரிதிவி ஷாவுக்குப் பதில் ஷுப்மன் கில்லைக் கொண்டு வருவது. லோகேஷ் ராகுலை தொடக்கத்தில் களமிறக்க வேண்டும். ஷுப்மன் கில்லை 5 அல்லது 6வது இடத்தில் களமிறக்கினால் பயனளிக்கும் அவரும் நல்ல பார்மில் இருக்கிறார்.

நமக்குத் தேவை நல்ல தொடக்கக் கூட்டணி அது நன்றாக அமைந்தால் நடுவரிசையில் மாற்றம் செய்து கொள்ளலாம். மெல்போர்னில் இதனைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.நல்ல ரன் எண்ணிக்கை இருந்தால்தான் பவுலிங் வீசும்போது உற்சாகமாக வீச முடியும். ஆஸ்திரேலிய பேட்டிங்கும் தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை, பலவீனமாகவே உள்ளது. எனவே இந்திய வீரர்கள் நம்மால் சரிவிலிருந்து மீண்டு வர முடியும் என்று நம்ப வேண்டும்.
அப்படி உறுதியான, நம்பிக்கையான மனநிலையில் இந்திய வீரர்கள் ஆடாமல் சோர்வடைந்தார்கள் என்றால் 0-4 என்று டெஸ்ட் தொடரை இழக்க வேண்டியதுதான். கிரிக்கெட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.
முதல் டெஸ்ட் போட்டியையே எடுத்துக் கொள்ளுங்கள், வலுவாக இருந்த இந்திய அணி எப்படி சரிவு கண்டது என்பதைப் பார்த்தோம் அல்லவா? எனவே மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை அவசியம்” என்றார் கவாஸ்கர்.
36 ஆல் அவுட் துர்க்கனவிலிருந்து வெளியே வரவில்லை எனில், நல்ல மனநிலையில் ஆடவில்லை எனில், 4 டெஸ்ட்களிலும் தோற்று ஒயிட்வாஷ் வாங்க வேண்டியதுதான் என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் கூறியபோது, “மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக லோகேஷ் ராகுலை இறக்க வேண்டும்.