முகப்பு /செய்தி /விளையாட்டு / IND VS AUS : இந்தியா - ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட் - ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

IND VS AUS : இந்தியா - ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட் - ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

நான்காவது டெஸ்ட் போட்டியில் பிரதமர் மோடி

நான்காவது டெஸ்ட் போட்டியில் பிரதமர் மோடி

இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ahmadabad (Ahmedabad) [Ahmedabad], India

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டில் குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியை நேரில் காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸும் மைதானத்துக்கு வந்தனர். இதையொட்டி, மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மைதானத்துக்கு வந்த இந்தியா- ஆஸ்திரேலியா பிரதமர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மைதானத்திற்குள் சிறப்பு வாகனத்தில் வந்த பிரதமர்கள் அரங்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு கைஅசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஸ்மித்துக்கு இருநாட்டு பிரதமர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

First published:

Tags: BCCI, India vs Australia, PM Narendra Modi