• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணி வீரர்கள் 11 பேரும் ஒற்றை இலக்க ரன்... டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை

இந்திய அணி வீரர்கள் 11 பேரும் ஒற்றை இலக்க ரன்... டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை

தெ.ஆ. தொடரை ரத்து செய்து ஆஸி. வெளியேற்றம்.

தெ.ஆ. தொடரை ரத்து செய்து ஆஸி. வெளியேற்றம்.

India vs Australia Test | இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • Share this:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் டிசம்பர் 17-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியை 191 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதை தொடர்ந்து இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. அதுவரை இந்திய அணியின் கை ஓங்கி இருந்த நிலையில் 3-வது நாளான இன்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் 5 விக்கெட்களையும், கம்மின்ஸ் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 36 ரன்களுக்கு சுருண்டது. கடைசி வீரராக களமிறங்கிய முகமது ஷமி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலிகினார். இதனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 90 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டது. எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி வீரர்கள் 11 பேரும் 2-வது இன்னிங்சில் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணியின் மிக குறைந்த பட்ச ஸ்கோர் (36) இதுவே. இதற்கு முன் 1974-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 42 ரன்கள் எடுத்திருந்ததே இந்திய அணியின் குறைந்தபட்ச ரன்னாக இருந்தது.



இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.  இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்க உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: