• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஷிகர் தவான் சதமடித்தும் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

ஷிகர் தவான் சதமடித்தும் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா. (BCCI)

ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா. (BCCI)

ராஞ்சியில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    இன்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 143 ரன்கள் குவித்தார். அடுத்த களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ஞ்ச் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    மறுபுறம் களமிறங்கிய உஸ்மான் கவாஜா அதிரடியாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த பீட்டர் ஹேன்ட்ஸ்ஹம்ப்பும் அதிரடியாக ஆடி, இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சுகளைச் சிதறடித்தனர். கவாஜா 91 ரன்களும் ஹேன்ட்ஸ்ஹம்ப் 117 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஷ்டோன் டர்னர் அதிரடியாக ஆடினார்.

    கடைசிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆஸ்திரேயாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 359 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று சம நிலையில் உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: