இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியிலும் வெற்றி பெற்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி டி-20 கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டாஸ் போடும் விராட் கோலி மற்றும் பிஞ்ச். (Cricket Australia)
இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு (பிப்.27) பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஷிகர் தவான் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர, மயங்க் மார்கண்டே, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, விஜய் சங்கர், சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். கேப்டன் கோலி அதிரடியாக ஆடி 72 ரன்களைக் குவித்தார். தோனியும் 40 ரன்களைக் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டி ஆர்கி ஷார்ட்டும் மார்க்ஸ் ஸ்டோனிஸ்ம் களமிறங்கினர். சித்தார்த் கவுல் பந்துவீச்சில் 2-வது ஓவரில் 7 ரன்னில் மார்க்கஸ் ஆட்டமிழந்தார். கேப்டன் ப்ரின்ச்சும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய க்ளென் மாக்ஸ்வெல், இந்திய வீரர்களின் பந்து வீச்சைச் சிதறடித்தார்.

சதம் அடித்த மேக்ஸ்வெல். (AFP)
அதிரடியாக ஆடியாக 55 பந்துகளில் 9 சிக்ஸ்ரகளுடன் ஆட்டமிழக்காமல் 113 ரன்களைக் குவித்தார். ஆட்டநேர இறுதியில் 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா அணி 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளைக் குவித்தார். முன்னதாக, 2007/08-ம் ஆண்டுகளில் நடந்த இந்தியா உடனான டி-20 தொடரை ஆஸ்திரேலியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை வீழ்த்தி டி-20 தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
VIDEO: தோனியைப் பார்த்து வாயைப் பிளந்த ஆஸி. பவுலர்!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.