• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி. (Twitter)

ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி. (Twitter)

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கவாஜா 100 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களும் எடுத்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்தது.

    இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவந்தது. ஏற்கெனவே, 2-2 என்ற இரு அணிகளும் சமனில் இருந்தநிலையில், இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கவாஜா 100 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களும் எடுத்தனர். அடுத்த களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரராக ஷிகர் தவான் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் விராத் கோலியும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுபக்கம் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மாவும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். கேதர் ஜாதவ், 44 ரன்களும், புவனேஷ்வர் குமார் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அதனால், இந்திய அணி 35 ரன்களில் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதனால், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்தது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: