ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 5 வது முறையாக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது .
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடங்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஹீலி மற்றும் மூனி இந்திய பந்துவீச்சை நான்காபுறமும் சிதறவிட்டனர். இருவரின் அதிரடியை கட்டுப்படுத்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தினறி வந்தனர்.
அலிஸா ஹீலி 39 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் விளாசி 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை மூனி இறுதி ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடினார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
பின்னர், பேட்டிங் செய்ய இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷெஃபாலி வர்மா, 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரை அடுத்து களமிறங்கிய தன்யா காயம் காரணமாக போட்டியில் பாதியிலிருந்து விலகினார். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்மிரிதி மந்தனா 11, கேப்டன் கவுர் 4 ரன்னிலும் வெளியேறினர்.
அடுத்துவந்த வீராங்கனைகளும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 5வது முறையாக கோப்பையை வென்றது.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.