ஒரு நாள் தொடரில் உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண்கள் அணி

ஒரு நாள் தொடரில் உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண்கள் அணி
ஆஸ்திரேலிய பெண்கள் அணி
  • News18
  • Last Updated: October 8, 2019, 12:27 PM IST
  • Share this:
ஒரு நாள் தொடரில் தொடர்ந்து 17-வது முறையாக வெற்றி பெற்று தன்னுடைய முந்தைய சாதனையை சமன் செய்துள்ளது ஆஸ்திரேலிய பெண்கள் அணி.

ஆஸ்திரேலியா-இலங்கை பெண்கள் அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய பெண்கள் அணி 50 ஓவர் முடிவில் 282 ரன்களை அடித்தது. அந்த அணியில் ராச்சல் ஹேய்ன்ஸ் 118 ரன்கள் அடித்து அசத்தினார்.


283 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி வீரர்கள் ஆஸ்திரேலிய பெண்கள் அணியினரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இலங்கை பெண்கள் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்து 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கை பெண்கள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு நாள் தொடரில் தொடர்ந்து 17-வது முறையாக வெற்றி பெற்று தன்னுடைய முந்தைய சாதனையை சமன் செய்துள்ளது ஆஸ்திரேலிய பெண்கள் அணி.முன்னதாக இதேபோல் 1997/98-க்களில் தொடர்ந்து 17 முறை ஆஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது.

Also watch

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்