முத்தரப்பு பெண்கள் டி20 தொடர் : இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா..!

முத்தரப்பு பெண்கள் டி20 தொடர் : இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா..!
IND vs AUS
  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு பெண்கள் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணி மோதிய முத்தரப்பு கிரிக்கெட் டி20 தொடர் நடைபெற்றது. இதில் லீக் சுற்றுடன் இங்கிலாந்து அணி வெளியேற மெல்போர்னில் நடந்த இறுதி ஆடட்த்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியடைந்து இருந்தது. முதல் மூன்று போட்டிகளில் பேட்டிங்கில் சறுக்கிய இந்திய பின்னர் சுதாரித்துக்கொண்டு கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அட்டகாசமாக சேஸ் செய்து மிரட்டியது.


இந்த நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியை எதிர்கொண்ட இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது ஆஸ்திரேலியா. இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 155 ரன்கள் குவித்தது. குறிப்பாக அந்த அணியின் பெத் மூணி அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்தார்.

இதை தொடர்ந்து இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 37 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். ஆனால் மற்ற வீராங்கணைகள் சோபிக்காததால் 20 ஓவர்களின் முடிவில் 144 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

அந்த அணி சார்பில் இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஜோனசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டதோடு ஆட்டநாயகி விருதையும் தட்டிச்சென்றார்.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading