Australia vs West Indies: யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் சரவெடி, 4 பவுண்டரி 7 சிக்ஸ்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

கிறிஸ் கெய்ல் சரவெடி இன்னிங்ஸ்.

ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் ஆடி 20 ஒவர்களில் 141/6 என்று முடிய, தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 14.5 ஓவர்களில் 142/4 என்று அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3- 0 என்று கைப்பற்றியது.

  • Share this:
    செயிண்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியுள்ளது. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன, ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் ஆடி 20 ஒவர்களில் 141/6 என்று முடிய, தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 14.5 ஓவர்களில் 142/4 என்று அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3- 0 என்று கைப்பற்றியது. கிறிஸ் கெய்ல் 2016க்குப் பிறகு முதல் டி20 அரைசதத்தை சர்வதேச போட்டியில் எடுத்தார். மொத்தம் 38 பந்துகளைச் சந்தித்த கெய்ல் 4 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

    பொறுப்புக் கேப்டன் நிகோலஸ் பூரன் 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆனால் இது கெய்ல் அதிரடி போட்டியானது, இங்கிலாந்துக்கு எதிராக 2016-ல் 100 நாட் அவுட்டுக்குப் பிறகு சர்வதேச டி20-யில் முதல் அரைசதத்தை எடுத்தார் கெய்ல்.

    Also Read: சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புகிறேன் - ‘ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டார்’ ஜாக்கி சான்
     சேசிங்கின் போது 2வது ஓவரில் ஜோஷ் ஹேசில்வுட்டை ஒரு சிக்சர் 3 பவுண்டரிகள் பறக்க விட்டார் யுனிவர்ஸ் பாஸ் கெய்ல். 11வது ஓவரில் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்ப்பாவை 3 நேர் சிக்சர்கள் அடித்து அரைசதம் பூர்த்தி செய்தார் கெய்ல். அரைசதம் அடித்து சிக்ஸ் மெஷின் மட்டையை உயர்த்தினார். மட்டையில் தி பாஸ் ஸ்டிக்கரும் இருந்தது.

    ஆட்ட நாயகன் விருது பெற்று பேசிய போது, புள்ளிவிவரங்களைப் பார்க்காதீர், ‘யுனிவர்ஸ் பாஸை மதிக்க வேண்டும்’ என்றார். நான் பேட்டிங்கில் திணறுவதை பலரும் அறிவார்கள், எனவே இன்று இந்த இன்னிங்ஸை ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. எமிரேட்சில் நடைபெறும் உலகக்கோப்பை டி20-யில் கெய்ல் ஒரு பெரிய ஈர்ப்பு சக்தியாக இருப்பார், ஆனால் அப்போது அவருக்கு வயது 42 ஆகி விடும்.

    இந்தத் தொடரில் முதல் டி20 போட்டியை 18 ரன்களில் வென்ற வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை 56 ரன்களில் நொறுக்கியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 31 பந்துகளில் 30 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்ப மேத்யூ வேட் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். மோய்சஸ் ஹென்றிக்ஸ் 33 ரன்களையும் ஆஷ்டன் டர்னர் 24 ரன்களையும் எடுத்தனர்.

    அமெரிக்க அணிக்கு 8 டி20 சர்வதேசப்போட்டிகளில் ஆடிய ரிஸ்ட் ஸ்பின்னர் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் தன் 2வது ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியாவுக்கு ஆணியறையப்பட்டது. இவர் 4 ஓவர்களில் 18/2 என்று தன் ஸ்பெல்லை சிக்கனமாக முடித்தார்.

    இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி புதனன்று நடைபெறுகிறது, ஆஸ்திரேலியா 2 ஆறுதல் வெற்றிகளையாவது பெறுமா என்பது சந்தேகமே.
    Published by:Muthukumar
    First published: