வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் திணறி வருவதால் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் போட்டி தொடரை ஆஸ்திரேலியா அணி 2 மேட்சிலும் வெற்றி பெற்று கைப்பற்றியிருந்தது.
இதனை அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2ஆவது டெஸ்ட் மேட்ச் அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் லபுஸ்சான் மற்றும் ஹெட் ஆகியோர் சதமடித்து அணி வலுவான நிலையை எட்ட உதவினர்.
லபுஸ்சான் 305 பந்துகளை எதிர்கொண்டு 163 ரன்களை எடுத்தார். ஹெட், 219 பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக 175 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் போதுமான அளவு ரன்கள் சேர்த்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டை இழந்து 511 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
FIFA WORLD CUP 2022 : காலிறுதி சுற்று இன்று ஆரம்பம்… அர்ஜென்டினா, பிரேசில் அரையிறுதிக்கு செல்லுமா?
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளனர். 31 ஓவர்கள் முடிவில் 73 ரன்களை எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Australia, Cricket, West indies