முகப்பு /செய்தி /விளையாட்டு / AUS vs SL 2nd ODI-19 ரன்களுக்கு 5 விக்.: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த இலங்கை

AUS vs SL 2nd ODI-19 ரன்களுக்கு 5 விக்.: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த இலங்கை

இலங்கை வெற்றி

இலங்கை வெற்றி

இலங்கை, பல்லெகிலேயில் நடந்த 2வது பகலிரவு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை இலங்கை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்று சமநிலை வகிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இலங்கை, பல்லெகிலேயில் நடந்த 2வது பகலிரவு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை இலங்கை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்று சமநிலை வகிக்கிறது. முதலில் பேட் செய்த இலங்கை மழையால் பாதிக்கப்பட்ட இன்னிங்சில் 47.4 ஓவர்களில் 220/9 என்ற ஸ்கோரை எட்டியது, பிறகு ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு டி/எல் முறைப்படி மாற்றியமைத்து 43 ஓவர்களில் 216 என்று நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் ஆஸ்திரேலியா 189 ரன்களுக்கு சுருண்டது.

முதல் போட்டியிலேயே நன்றாக விளையாடியது இலங்கை அணி ஆனால் மேக்ஸ்வெல் எனும் பினிஷிங் ஜீனியஸினால் போட்டியைத் தோற்றது. அதில் 300 ரன்கள் அடித்துத் தோற்றாலும் நேற்று 216 ரன்கள் இலக்கை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

பிட்சில் பந்துகள் பெரிய அளவில் ஸ்பின் ஆகின. ஸ்பின்னர் தனஞ்ஜய டிசில்வா, டேவிட் வார்னர் (37), ஆரோன் பிஞ்ச் (14) ஆகியோர் விக்கெட்டுகளை முதலில் கைப்பற்றினார். பிறகு வெல்லகே தன் பந்து வீச்சில் ட்ராவிஸ் ஹெட் (23), மார்னஸ் லபுஷேன் (18) வெளியேறினர்.

ஆனால் இந்த ஸ்லோ பிட்சிலும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்க்ள் துஷ்மந்த சமீரா 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சமிகா கருணரத்னே 7 ஓவர் 47 ரன்கள் என்று சாத்து வாங்கினார், ஆனால் இவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அதில் அபாய வீரர் கிளென் மேக்ஸ்வெல் (30) விக்கெட்டும் அடங்கும்.

இலங்கை அணி பெட் செய்த போது அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 36 ரன்களை எடுக்க, தனஞ்ஜெயா மற்றும் ஷனகா முறையே 34 ரன்களை எடுத்தனர். இலங்கையினாலும் அடிக்க முடியவில்லை காரணம், பிட்சின் ஸ்லோ தன்மையை அற்புதமாகக் கையாண்ட பாட் கமின்ஸ் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்ற கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அறிமுக இடது கை ஸ்பின்னர் மேத்யூ கூனேமன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சிஎஸ்கேவில் அறிமுகமான மகீஷ் தீக்சனாவுக்கு பந்துகள் நன்றாகத் திரும்பின. வார்னர்தான் இந்தப் போட்டியிலேயே அதிக ஸ்கோரான 37-ஐ எடுத்தார், ஸ்டீவ் ஸ்மித் 35 பந்துகளில் 28 ரன்கள் பங்களிப்பு செய்தார், ஆனால் ஷார்ட் பிட்ச் பந்தில் கருணரத்னே பந்தில் ஷார்ட் பைன்லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஆஸ்திரேலியா 170/5லிருந்து கிளென் மேக்ஸ்வெல் கருண ரத்னவிடம் அவுட் ஆகி வெளியேறியவுடன் இவர் விக்கெட்டுடன் சேர்ந்து 2.5 ஓவர்களில் 19 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 37.1 ஓவர்களில் 189 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்ட நாயகன் சமிகா கருணரத்னே.

First published:

Tags: Australia, ODI, Sri Lanka