Home /News /sports /

Aus vs SL 1st test: எதிரணிக்காக தோண்டிய குழியில் தானே விழுந்த இலங்கை: இரண்டரை நாட்களில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

Aus vs SL 1st test: எதிரணிக்காக தோண்டிய குழியில் தானே விழுந்த இலங்கை: இரண்டரை நாட்களில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

கால்லே டெஸ்ட்டில் இரண்டரை நாட்களில் இலங்கையை ஊதிய ஆஸி.

கால்லே டெஸ்ட்டில் இரண்டரை நாட்களில் இலங்கையை ஊதிய ஆஸி.

எதிரணியினருக்காக போடப்பட்ட குழிப்பிட்சில் இலங்கையே தடுமாறி விழுந்து கால்லே டெஸ்ட் போட்டியில் இரண்டரை நாட்களில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது,

    எதிரணியினருக்காக போடப்பட்ட குழிப்பிட்சில் இலங்கையே தடுமாறி விழுந்து கால்லே டெஸ்ட் போட்டியில் இரண்டரை நாட்களில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது, ஒழுங்காக பேட்டிங் பிட்ச் போட்டிருந்தால் கூட எப்படியாவது இழுத்திருக்கலாம், இப்படி அசிங்கமாக இரண்டரை நாளில் தோற்க நேரிட்டிருக்காது.

    இந்தியா ஒருமுறை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக குழிப்பிட்சை போட்டு நிக்கி போயே என்ற லாலிபாப் பவுலர் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்தியா தொடரை 2-0 என்று இழந்தது, இங்கிலாந்துக்கு எதிராகவும் குழிப்பிட்சைப் போட்டு ஸ்வான், பனேசரிடம் தோற்று புறமுதுகு காட்டியது. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தது அப்போது, இப்போதும் அதே வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

    கால்லே டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 313/8 என்று தொடங்கி 321 ரன்களுக்குச் சுருண்டது. 109 ரன்கள் பின் தங்கிய இலங்கை அணி 76 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்குச் சுருண்டது. நேதன் லயன் 4 விக்கெட்டுகளை வீழ்த்த சற்றும் எதிர்பாராமல் ட்ராவிஸ் ஹெட் 2.5 ஓவர் 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    22.5 ஓவர்களில் இலங்கை 113 ரன்களுக்குச் சுருண்டது. ஒரு கட்டத்தில் 97/7 என்று இன்னிங்ஸ் தோல்வியையும் தழுவி விடும் என்ற நிலை இருந்தது. ஆனால் எப்படியோ அதை தவிர்த்தது.
    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 10/0 என்று வென்றது, வார்னர் ஒரு பவுண்டரி 1 சிக்சர் என்று 4 பந்துகளில் கதையை முடித்தார். 2011-க்குப் பிறகு ஆஸ்திரேலியா இலங்கையில் முதல் முறையாக வென்றுள்ளது. அதே போல் 2வது பேட் செய்து ஆஸ்திரேலியா வென்றதும் இதுவே முதல்முறை.

    இலங்கை அணியின் பேட்டிங் படுமோசம், ஆஸ்திரேலியா போல் ஆக்ரோஷமாக ஆடுகிறேன் பேர்வழி என்று அஞ்சேலோ மேத்யூஸ் கோவிட் காரணமாக இல்லாத போது ஒரு பேட்டர் ஷாட் எனும்போது இப்படி ஆட முடிவெடுக்கக் கூடாது.

    ஆனால் இலங்கை ஆக்ரோஷமாகவே தன் இன்னிங்ஸைத் தொடங்கியது மிட்செல் ஸ்டார்க்கின் முதல் ஓவரிலேயே 17 ரன்கள் விளாசினர். கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முதல் ஓவரில் கொடுத்த அதிக ரன்களாகும். ஸ்டார்க் 2 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்தார். நேதன் லயன் முதல் ஓவரை ஸ்டார்க்குடன் பகிர்ந்து கொண்டு தொடர்ச்சியாக ஒரு முனையில் வீச மறுமுனையில் 5வது ஓவரி ஸ்வெப்சன் வந்தார்.

    ஆக்ரோஷமாக ஆடுகிறோம் என்று அலட்சியமாக ஆடி அசிங்கமாக அவுட் ஆகிச் சென்றனர், பிட்சில் பந்துகளும் இருக்க இருக்க எங்கு குத்தி எங்கு திரும்பும் என்று அறிய முடியா நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. ஸ்கோர் 37 ஆக இருந்த போது கருணரத்னே 23 ரன்களில் நேதன் லயனை ஸ்வீப் ஆட முயன்று அவுட் ஆனார்.

    37/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 17.2 ஓவர்களில் 76 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 113 ரன்களுக்கு சுருண்டது. வேடிக்கை என்னவெனில் இம்ரான் கான் ஒருமுறை பெங்களூர் டெஸ்ட்டில் முடிவெடுத்தது போல் கேப்டன் கமின்ஸ் ஒரு ஓவர் கூட போடவில்லை. நேதன் லயன் 9 விக்கெட்டுகள், ஆட்ட நாயகனாக குழிப்பிட்சில் 77 ரன்கள் விளாசிய கேமரான் கிரீன் தேர்வு செய்யப்பட்டார். 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை பெற்றது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Australia, Pat Cummins, Sri Lanka, Test match

    அடுத்த செய்தி