ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இரண்டே நாட்களில் முடிந்த ஆஸி. – தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்… ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்…

இரண்டே நாட்களில் முடிந்த ஆஸி. – தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்… ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்…

வெற்றியைக் கொண்டாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

வெற்றியைக் கொண்டாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

34 ரன்கள் இலக்கில் 19 ரன்கள் எக்ஸ்ட்ராஸில் கிடைத்தன. குறிப்பாக 15 வைடுகளை தென்னாப்பிரிக்க பவுலர்கள் வீசியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் மேட்ச் இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

சாதாரணமாக 5 நாட்களுக்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். இல்லாவிட்டால் குறைந்தது 4 நாட்களாவது பெரும்பாலான போட்டிகள் நேரம் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில் வலிமை வாய்ந்த 2 அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் எல்கர், சாரெல் எர்வீ ஆகியோர் பேட்டிங் செய்தனர். இதில் எல்கர் 3 ரன்னிலும், எர்வீ 10 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த வான் டர் டசன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

WATCH – குரோஷியா – மொராக்கோ கால்பந்தாட்ட போட்டியின் ஹைலைட்ஸ்…

பின்னர் இணைந்த பவுமா – விக்கெட் கீப்பர் வெரேன் இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்தது. 5 ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தியது. பவுமா 38 ரன்னிலும், வெரேன் 64 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் 10 ரன்கள் எடுத்த ரபாடாவை தவிர்த்து மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 152 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது.

ஆஸ்திரேலிய பவுலர்களில் ஸ்டார்க், லியோன் தலா 3 விக்கெட்டுகளையும், கமமின்ஸ், போலண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா 50.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹெட் 92 ரன்களும் ஸ்டீவன் ஸ்மித் 36 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க பவுலர்கள் ரபாடா 4 விக்கெட்டுகளும், ஜேன்சென் 3 விக்கெட்டுகளும், நோட்ஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

66 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழத் தொடங்கியது. தொடக்க வீரர்கள் சாரெல் எர்வீ 3 ரன்னிலும், கேப்டன் எல்கர் 2 ரன்னிலும், அடுத்து வந்த வான்டர் டசன் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.

IND vs BAN Test: 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. தொடரில் முன்னிலை

அடுத்து இணைந்த பவுமா – ஜோண்டா இணை சற்று நேரம் தாக்குப்பிடித்தது. இந்த இணை 4ஆவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தது. பவுமா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில்மகராஜ் மட்டும் 16 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டியதால் 37.4 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோண்டா 36 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய வீரர்கள் களம் இறங்கினர். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழா அணியே ஆட்டம் கண்டது. உஸ்மான் கவாஜா 2, டேவிட் வார்னர் 3, ஸ்டீவன் ஸ்மித் 6, டிராவிஸ் ஹெட் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் 24 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து அணி தள்ளாடியது.

பின்னர் தென்னாப்பிரிக்க பவுலர்கள் வாரி வழங்கிய உதிரிகளால் ஆஸ்திரேலிய அணி 7.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. 34 ரன்கள் இலக்கில் 19 ரன்கள் எக்ஸ்ட்ராஸில் கிடைத்தன. குறிப்பாக 15 வைடுகளை தென்னாப்பிரிக்க பவுலர்கள் வீசியுள்ளனர்.

First published:

Tags: Australia, South Africa