ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாக்ஸிங் டே டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியாவிடம் போராடும் தென்னாப்பிரிக்கா

பாக்ஸிங் டே டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியாவிடம் போராடும் தென்னாப்பிரிக்கா

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பேட் கம்மின்ஸ்

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பேட் கம்மின்ஸ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 575 ரன்களுக்கு டிக்ளேர் செய்து 386 முன்னிலையில் வலுவான நிலையில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • intern, IndiaMelbourneMelbourneMelbourneMelbourneMelbourneMelbourne

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 26ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்து இருந்தது. டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் ஸ்டீவன் ஸ்மித் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இன்று 3வது நாள் ஆட்டத்தில் ஹெட் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 6வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 8வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும், கேமரூனும் 100 ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

அலெக்ஸ் கேரி 111 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 51 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தபோது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இது தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோரை விட 386 ரன்கள் முன்னிலை ஆகும்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சிஸ் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பத்திலே தொடக்க வீரர் எல்கர் விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 15 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட தென் ஆப்பிரிக்கா அணி 371 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

First published:

Tags: Australia, Boxing Day, Melbourne, South Africa