இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதல்! வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ICC WORLD CUP | இந்தியாவுடன் விளையாடிய போட்டி தவிர, மற்ற இரு ஆட்டங்களிலும் வென்ற ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் வெற்றியை வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதல்! வெற்றி வாய்ப்பு யாருக்கு?
பாகிஸ்தான்
  • News18
  • Last Updated: June 12, 2019, 10:39 AM IST
  • Share this:
உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கை, வங்கதேசம் இடையேயான போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. இன்றைய லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை, பாகிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில், பிரிஸ்டோல் மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேற்று மோதுவதாக இருந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், டாஸ் கூட போடப்படாமல் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

ஆஸ்திரேலியாஇதற்கு முன்னதாக, பாகிஸ்தான், இலங்கை இடையேயான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதேபோல, தென்ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் இடையேயான போட்டியில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதிக அளவிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்ட மற்றும் முடிவு எட்டப்படாத போட்டிகளைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராக, இந்த ஆண்டுக்கான தொடர் அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 17-வது லீக் போட்டியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, பாகிஸ்தான் களமிறங்குகிறது.

இந்தியாவுடன் விளையாடிய போட்டி தவிர, மற்ற இரு ஆட்டங்களிலும் வென்ற ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் வெற்றியை வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

Also see... சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் நம்பிக்கை நட்சத்திரம்

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...