பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்தது ஆஸ்திரேலியா!

World cup cricket 2019: நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடரில் 3-வது வெற்றியை பதிவு செய்து பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்தது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான்
  • News18
  • Last Updated: June 13, 2019, 7:24 AM IST
  • Share this:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்தது ஆஸ்திரேலியா. வார்னரின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. டாண்டன் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின்ச் மற்றும் வார்னர் ஆரம்பத்திலிருந்தே ரன் குவிக்க தொடங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தனர். 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் விளாசிய ஃபின்ச் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.


பின்னர் அதிரடியாக விளையாடிய வார்னர் சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஒருநாள் அரங்கில் வார்னர் அடிக்கும் 15-வது சதம் இதுவாகும்.

மற்ற வீரர்கள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அமீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49-வது ஓவரில் 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் அமீர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

வார்னர்
இதனை தொடர்ந்து 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜமான், டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

பாபர் அஸாம் 30 ரன்களில் வெளியேற இமாம் அரைசதம் கடந்து சற்று ஆறுதல் அளித்தார். பின்பு பொருப்பாக விளையாடிய ஹபீஸ் 46 ரன்களும், கேப்டன் சர்ஃப்ராஷ் அக்மத் 40 ரன்களும் சேர்த்து அணியின் ரன் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.

மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்ட பந்துவீச்சாளர் வகாப் ரியாஷ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தார். இக்கட்டான சூழ்நிலையில் கடைசி வினாடியில் பின்ச் ரிவியூ கேட்க, ரியாஷ் நூழிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பேட்டிங் செய்யும் பாகிஸ்தான்


இறுதியில் 26 பந்துகள் மீதிமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி 266 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரில் 3-வது வெற்றியை பதிவு செய்து பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சதம் விளாசி வெற்றிக்கு உதவிய வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Also see... ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்டிய விராட் கோலி

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading