ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

”என்னங்க இதெல்லாம் ஊர் கிரிக்கெட்டே பரவல போல” ஆஸ்திரேலிய போட்டியில் ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

”என்னங்க இதெல்லாம் ஊர் கிரிக்கெட்டே பரவல போல” ஆஸ்திரேலிய போட்டியில் ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய பேட்டிங் செய்தபோது 4வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது

ஆஸ்திரேலிய பேட்டிங் செய்தபோது 4வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது

இந்த சம்பவத்தை மிகப்பெரிதாக எடுத்துகொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நடுவர் குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் ஆஸ்திரேலியா பேட் செய்த 4வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது.

  டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி,20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 164 ரன்களை எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி வரை போராடிய ரஷித் கான் 23 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 48 ரன்கள் எடுத்தார்.

  இந்த நிலையில் ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் செய்தபோது ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் வீசிய 4ஆவது ஓவரில், 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. முதல் பந்தில் மார்ஷ் 1 ரன் எடுக்க, 2ஆவது பந்தில் வார்னர் ஒரு ரன் எடுத்தார்.

  3ஆவது பந்தை மார்ஷ் பவுண்டரிக்கு விரட்ட, 4ஆவது பந்தில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தை வார்னர் டாட் செய்தார். 6ஆவது பந்து வீசப்படவில்லை. நடுவர்களின் கவனக்குறைவால் இந்த தவறு நடந்துள்ளது. இந்த சம்பவத்தை மிகப்பெரிதாக எடுத்துகொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில்  நடுவர் குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

  இதையும் படிங்க: சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலகும் முடிவுக்கு செக் வைத்த தோனி? சிஎஸ்கே-வில் இருந்து விடுவிக்கபோகும் வீரர்கள் யார் யார் தெரியுமா?

  இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றாலும் அடுத்த போட்டியில் இலங்கை அணியிடம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலே ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்துவிடும். இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும். இருப்பினும் இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆட்டத்தை பொறுத்தே அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளதா என்பதை முடிவு செய்ய முடியும்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Afganistan, Australia, ICC, T20 World Cup, Umpire