ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில முக்கிய மாற்றங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 2020 தொடரில் இந்திய அணி வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். ஐ.பி.எல் 2020 தொடர் இறுதி போட்டி நவம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. ஐ.பி.எல் 2020 தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. தற்போது அதில் சில மாற்றங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் டி20 போட்டிகளில் காயம் காரணமாக வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இடம்பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்புகிறார். மற்ற 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று காயம் காரணமாக அவதிப்படும் விருதமான் சாஹாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா காயத்திலிருந்து மீண்டு வந்தால் அவருக்கு மட்டும் அணியில் இடம்கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்