இங்கிலாந்து பறக்கிறது ஆஸ்திரேலிய அணி - 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டம்

மாதிரி படம்

கொரோனா வைரசை தாங்களும் வென்றுவிட்டோம் என்பதை உலகிற்கு காட்டும் அடையாளமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டதை வெளிப்படுத்தும் நோக்கில் சர்வதேச போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சுமார் 4 மாதங்கள் சர்வதேச போட்டிகள் நடக்காத நிலையில், தற்போது இங்கிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கொரோனா அச்சத்திலிருந்து தாங்களும் மீண்டு விட்டோம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உலகிற்கு சொல்லும்  விதமாக இங்கிலாந்து செல்லவுள்ளது. அந்நாட்டு அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 4,6 மற்றும் 8-ம் தேதிகளில் டி20 போட்டிகளும், 10,12, 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

டி20, ஒருநாள் தொடர் இரண்டுமே மான்செஸ்டர் மற்றும் சவுத்தாம்ப்டன் ஆகிய 2 மைதானங்களில் நடைபெறும் படி அட்டவணை உள்ளது. காரணம், இவ்விரு மைதானங்களில் தான் தங்கும் விடுதி மைதானத்துடனேயே இணைத்து இருப்பதால், இதனை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இவ்விரு மைதானங்களில் தான் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது. அடுத்து பாகிஸ்தான் உடனும் இந்த மைதானங்களில்தான் போட்டி நடைபெறவுள்ளது என்பதால், ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளுக்கும் இந்த மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக உத்தேசமாக 26 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து முழு உடல் தகுதியுடன் உள்ள 15 வீரர்களை தேர்வு செய்யப்பட இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Also read... அரசு கலை & அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்... நடைமுறை என்ன? விபரம் இதோ!

ஆஸ்திரேலியாவில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்து செல்லவுள்ள அணிக்கு, அங்கு தனிமைப்படுத்தப்படும் ஏற்பாட்டை இன்னும் இங்கிலாந்து உறுதிப்படுத்தவில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேசிய அணியின் தலைவர் Ben Oliver கூறியுள்ளார். வீரர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முதலில் முக்கியம் எனவும், அவர் கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published: