டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு- ஸ்மித், வார்னர் உண்டா?

வார்னர், ஸ்மித்

டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, முழு வலுவான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, முழு வலுவான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    சமீபமாக மே.இ.தீவுகள், வங்கதேச அணிகளிடம் ஆஸ்திரேலிய டி20 அணி செம உதை வாங்கிக்கட்டிக் கொண்டது, ஆஸ்திரேலியாவுக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்களிடத்தில் கேள்வி எழுந்தது.

    ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள டி20 உலகக்கோப்பை அணிக்கு டேவிட் வார்னர், ஸ்மித், பாட்கமின்ஸ் ஆகியோர் திரும்பியுள்ளனர்.

    Also Read: ‘அது வேற வாய் இது நாற வாய்’- விராட் கோலியைத் தாக்கும் முன்னாள் வீரர்

    ஆக்ரோஷ பேட்ஸ்மென்கள் மற்றும் வேகப்பந்து, ஸ்பின் கலவையென சமச்சீரான 15 வீரர்கள் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பைக் கிரிக்கெட்டில் 12 முறையில் 5 முறை உலக சாம்பியன்கள் இருமுறை ரன்னர்களான ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையை ஒருமுறை கூட வென்றதில்லை.

    இந்த அணியில் இதுவரை ஆடாத ஜோஷ் இங்லிஸ் என்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் தேர்வு செய்யப்பட்டார். இவர் மேத்யூ வேடுக்கு பேக்-அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கமின்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், வார்னர், ஸ்மித் என்று டாப் ஆர்டரில் அதிரடி அணிச்சேர்க்கை உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆஸ்திரேலிய அணி வருமாறு:

    ஏரோன் பிஞ்ச் (கேப்டன்), பாட் கமின்ஸ் (துணைக் கேப்டன்), ஆஷ்டன் ஆகர், ஜோஷ் ஹாசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்ப்பா
    Published by:Muthukumar
    First published: