Home /News /sports /

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் விபத்தில் சிக்கினார்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் விபத்தில் சிக்கினார்

ஷேன் வார்ன்.

ஷேன் வார்ன்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் லெஜண்ட், லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். கால் உடைந்திருக்கும் என்ற அச்சத்தில் அவர் மருத்துவமனைக்குச் சென்றார்.

    ஷேன் வார்ன் தன் மகன் ஜேக்சனுடன் 300 கிலோ எடை கொண்ட பைக்கில் மெல்போர்னில் சென்று கொண்டிருந்த போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. ஞாயிறன்று விபத்து நடந்துள்ளது, ஆனால் கண்களுக்குத் தெரியும் காயம் எதுவும் இல்லை. உள்காயம் அதனால் அவர் உடனே மருத்துவமனைக்குச் செல்லவில்லை. ஆனால் திங்கள்னன்று கடும் வலி ஏற்படவே ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.

    விபத்தில் இவரது பைக் சுமார் 15 அடி சறுக்கிக் கொண்டு சென்றது, இதனையடுத்து அவரது இடுப்பு, பாதம், கணுக்கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரது மகன் தான் உடனே ஷேன் வார்னை தூக்கி உறுதுணையாக இருந்துள்ளார். ஆஷஸ் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஷேன் வார்ன் இந்த விபத்தினால் கமெண்ட்ரிக்கு உடனடியாக வருவாரா அல்லது 2வது டெஸ்ட் போட்டிக்குத்தான் வருவாரா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.

    ஆஷஸ் தொடரே சிக்கலில் உள்ளது, காரணம் புதிதாகப் பரவி வரும் கொரோனா உருமாறிய மைக்ரான் வைரஸ்தான். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய லெஜண்டரி ஸ்பின்னரான ஷேன் வார்ன் வர்ணனையில் சிலபல நுணுக்கமான, நுட்பமான கிரிக்கெட் தகவல்களை எப்போதும் சொல்வார், கேப்டன்சி, களவியூகம் பந்து வீச்சு மாற்றம், மட்டையாளர்களின் பலவீனம் என்ன? கால்நகர்த்தல் என்று முழுமுற்றான தகவல்களுடன் வர்ணனை செய்பவர். இப்போது விபத்தில் சிக்கி காயமடைந்திருப்பதால் வர்ணனைக்கு முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு வருவாரா என்ற ஐயம் எழுந்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, Shane Warne

    அடுத்த செய்தி