HOME»NEWS»SPORTS»cricket australia scored 289 runs against india vjr

ஆஸ்திரேலியா விளாசல்... இந்திய அணிக்கு இமாலய இலக்கு

India vs Australia | ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியா இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.

ஆஸ்திரேலியா விளாசல்... இந்திய அணிக்கு இமாலய இலக்கு
ind vs aus
  • Share this:

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இன்றையப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.



இதையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஃபின்ச் இன்றையப் போட்டியிலும் ரன்வேட்டையில் ஈடுபட்டனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியா இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது.

டேவிட் வார்னர் 83, ஃபின்ச் 60, ஸ்டீவன் ஸ்மித் 104, மார்னஸ் 70, மேகஸ்வெல் 63 ரன்களை விளாசினார். இதையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.





அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
Published by:Vijay R
First published: